TNPSC Thervupettagam

ஜல் ஜீவன் திட்டம் 5 ஆண்டுகள்

August 29 , 2024 89 days 127 0
  • ஜல் ஜீவன் திட்டம் (JJM) ஆனது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
  • இது 2024 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பங்களுக்கும் குழாய் நீர் சேவையினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • இது தொடங்கப்பட்ட நேரத்தில், சுமார் 3.23 கோடி (17%) கிராமப்புறக் குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்புகள் இருந்தன.
  • 2024 ஆம் ஆண்டிற்குள் மேலும் 16 கோடி குடும்பங்களுக்குக் குழாய் நீர் வசதியினை வழங்குவதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரையில், கூடுதலாக 11.85 கோடி கிராமப்புறக் குடும்பங்களுக்கு வெற்றிகரமாக குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் மொத்த கிராமப்புறக் குடும்பங்களில் 78.11% அதாவது 15.07 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு இது குடிநீர் இணைப்பினைக் கொண்டு வருகிறது.
  • 100 சதவிகித குழாய் வழி நீர் இணைப்பினைக் கொண்டுள்ள மாநிலங்கள் – கோவா, தெலங்கானா மற்றும் அரியானா
  • 100 சதவிகித குழாய் வழி நீர் இணைப்பினைக் கொண்டுள்ள ஒன்றியப் பிரதேசங்கள் – புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டையூ & டாமன்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்