ஜல் ஜீவன் திட்டம் (JJM) ஆனது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
இது 2024 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பங்களுக்கும் குழாய் நீர் சேவையினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
இது தொடங்கப்பட்ட நேரத்தில், சுமார் 3.23 கோடி (17%) கிராமப்புறக் குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்புகள் இருந்தன.
2024 ஆம் ஆண்டிற்குள் மேலும் 16 கோடி குடும்பங்களுக்குக் குழாய் நீர் வசதியினை வழங்குவதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரையில், கூடுதலாக 11.85 கோடி கிராமப்புறக் குடும்பங்களுக்கு வெற்றிகரமாக குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த கிராமப்புறக் குடும்பங்களில் 78.11% அதாவது 15.07 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு இது குடிநீர் இணைப்பினைக் கொண்டு வருகிறது.
100 சதவிகித குழாய் வழி நீர் இணைப்பினைக் கொண்டுள்ள மாநிலங்கள் – கோவா, தெலங்கானா மற்றும் அரியானா
100 சதவிகித குழாய் வழி நீர் இணைப்பினைக் கொண்டுள்ள ஒன்றியப் பிரதேசங்கள் – புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டையூ & டாமன்.