2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், ஜல் ஜீவன் திட்டமானது 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாகவும், அதற்கான மொத்த நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப் படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் கிராமப்புற மக்களில் 80 சதவீதத்தினை உள்ளடக்கிய 150 மில்லியன் குடும்பங்கள் குடிநீர் குழாய் இணைப்புகளைப் பெற்று உள்ளன.
100 சதவீத சேவை வழங்கீட்டினை அடைவதற்காக ஜல் ஜீவன் திட்டம் ஆனது 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கான இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு சுமார் 70,163 கோடி ரூபாய் ஆகும்.
இந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு ஆனது 67,000 கோடி ரூபாயாக உள்ளது என்ற ஒரு நிலையில் இது கடந்த ஆண்டை விட 3,163 கோடி ரூபாய் குறைவாகும்.
ஜல் ஜீவன் திட்டமானது, 2024 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குடிநீர்க் குழாய் இணைப்பினை வழங்குவதை இலட்சிய இலக்காகக் கொண்டு 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது.