TNPSC Thervupettagam

ஜல் ஜீவன் திட்டம் நீட்டிப்பு

February 5 , 2025 22 days 79 0
  • 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், ஜல் ஜீவன் திட்டமானது 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாகவும், அதற்கான மொத்த நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப் படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் கிராமப்புற மக்களில் 80 சதவீதத்தினை உள்ளடக்கிய 150 மில்லியன் குடும்பங்கள் குடிநீர் குழாய் இணைப்புகளைப் பெற்று உள்ளன.
  • 100 சதவீத சேவை வழங்கீட்டினை அடைவதற்காக ஜல் ஜீவன் திட்டம் ஆனது 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு சுமார் 70,163 கோடி ரூபாய் ஆகும்.
  • இந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு ஆனது 67,000 கோடி ரூபாயாக உள்ளது என்ற ஒரு நிலையில் இது கடந்த ஆண்டை விட 3,163 கோடி ரூபாய் குறைவாகும்.
  • ஜல் ஜீவன் திட்டமானது, 2024 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குடிநீர்க் குழாய் இணைப்பினை வழங்குவதை இலட்சிய இலக்காகக் கொண்டு 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்