- நாட்டின் முதல் தேசிய நீர்வழிப்பாதையின் (National Inaterway – 1) மீதான வழிகாட்டு அமைப்பின் திறனை பெருக்குவதற்காக (Capacity Augmentation of Navigation) ஏற்படுத்தப்பட்ட ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின் அமலாக்கத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
- உலக வங்கியின் முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முதல் தேசிய நீர்வழிப்பாதை
- கங்கா-பாகிரதி-ஹீக்ளி நதி போக்குவரத்து அமைப்பு என்றழைக்கப்படும் முதல் தேசிய நீர்வழிப் பாதையானது (National Waterway – I) கங்கா, பாகிரதி மற்றும் ஹீக்ளி நதி அமைப்பின் மேல் ஹால்தியாவில் தொடங்கி அலகாபாத் வரை அமைந்துள்ளது. சுமார் 1620 கி.மீ. நீளமுள்ள இந்த நீர்வழிப்பாதை இந்தியாவின் மிகவும் நீளமான நீர்வழிப் போக்குவரத்துப் பாதையாகும்.
- கங்கை நதியின் கடினமான நீரியல் தோற்ற அமைப்பின் (Hydro Morphological Characteristics) பண்பியல்புகளினாலும், கங்கையின் கிளை நதிகளின் குறைந்த அளவிலான நீரோட்ட வெளியேற்றங்களினாலும் பராக்கா அணைக் கட்டமைப்பின் மேல்நிலை நீரோட்டப் பகுதிகளில் (Upstream) குறைந்த ஆழம் காணப்படுவது இத்திட்டத்தின் வணிக ரீதியான நீடித்த தன்மைக்கும், பாதுகாப்பான நீர்வழிப் பயணத்திற்கும் பெரும் பிரச்சினையாக உள்ளது.