காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் மற்றும் எருமைப் பந்தய விளையாட்டான கம்பாலா போன்றவற்றை அந்தந்தப் பகுதிகளில் நடத்துவதற்காக தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இயற்றியச் சட்டங்களின் செல்லுபடித் தன்மையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உள்ளது.
1960 ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தினை மீறுவதாகக் கூறி இந்த விளையாட்டுகளை 2014 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தடை செய்தது.
விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) 2017 மற்றும் விலங்குகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துதல்) விதிகள் 2017 ஆகியவற்றை தமிழ்நாடு நிறைவேற்றியது.
விலங்கு வதையினைத் தடுப்பதற்கான சட்டங்கள் அரசியலமைப்பில் உள்ள ஏழாவது அட்டவணையின் பொதுப் பட்டியலின் (பட்டியல் 3) 17வது உள்ளீடுடன் தொடர்புடையப் பிரிவாகும்.
"ஏறு தழுவுதல்" என்றும் அழைக்கப்படும், "ஜல்லிக்கட்டு" போட்டியானது பொங்கல் அறுவடைத் திருவிழாவின் ஒரு பகுதியாக தமிழகத்தில் நடத்தப்படும் காளைகளை தழுவும் விளையாட்டுப் போட்டியாகும்.
கர்நாடகாவில் நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்படும் கம்பாலா என்ற பந்தயமானது ஒரு ஜோடி எருமை மாடுகளை ஒரு கலப்பையில் கட்டி, ஒருவரால் நடத்தி உழப்படும் போட்டியாகும்.