மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆனது, உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை நன்கு மேம்படுத்துவதற்காக 'ஜல்வஹக்' திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது உள்நாட்டு நீர்வழிகளின் வர்த்தகத் திறனை வெளிக் கொணர்வது, தளவாடச் செலவினங்களை நன்கு குறைப்பது மற்றும் சாலை மற்றும் இரயில் போக்குவரத்து வலையமைப்புகளில் உள்ள நெரிசலைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய நீர்வழிகள் (NW) 1 (கங்கை), 2 (பிரம்மபுத்திரா) மற்றும் 16 (பராக்) ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் நீண்ட தூர அளவிலான சரக்குப் போக்குவரத்துகளுக்கு ஊக்கத் தொகைகளை இது வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், நீர்வழிகள் வழியாக சுமார் 300 கிலோ மீட்டருக்கு மேலான தொலைவுகளுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் சரக்கு உரிமையாளர்கள் அதற்கான போக்குவரத்துச் செலவில் 35 சதவீதம் வரை திரும்பப் பெறுவார்கள்.