2017-18 முதல் 2019-20 ஆண்டு காலத்திற்கான ஜவுளித் துறையின் திறன் கட்டுமானத் திட்டம் (Scheme for Capacity Building in Textile Sector) எனும் புதிய திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
முறைசார் தொழிற் துறையின் (Organised Sector) நூற்பு (spinning) மற்றும் நெசவு (weaving) பிரிவைத் தவிர ஜவுளித் துறையின் பிற அனைத்து பிரிவுகளின் முழுமதிப்புச் சங்கிலியும் (Valur Chain) இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும்.
இதனால் அதிக பணியாளர்கள் செறிவுடைய ஜவுளித் துறைக்கு திறனுடைய மனித ஆற்றல் (Skilled Manpower) அளிப்பு உறுதி செய்யப்படும்.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தால் அறிவிக்கப் பெறும் பொது விதிகளின் படி நிதியளிக்கும் கூறுகளோடு, திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் ஒத்திசைந்த தேசிய திறன் மேம்பாட்டு தகுதி கட்டமைப்பை இத்திட்டம் (National Skill Qualification Frame work) கொண்டுள்ளது.