ஜவுளித்துறை அமைச்சகத்தின் கைவினைப் பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் கண்காட்சி
October 13 , 2017 2600 days 852 0
மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் 44வது இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் கண்காட்சியை நொய்டாவிலுள்ள இந்திய ஏற்றுமதி மையத்தில் தொடங்கி வைத்துள்ளது.
இது ஆசியாவின் மிகப்பெரிய கைவினைப் பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்களின் கண்காட்சிகளில் ஒன்றாகும் .
இக்கண்காட்சி வருடத்திற்கு இருமுறை (இலையுதிர் காலம் மற்றும் இளவேனிற் காலத்தில்) கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தால் (Export Promotion Council for Handicrafts - EPCH) நடத்தப்படுகிறது.