ஜஸ்டின் ட்ரூடோ தனது கனடிய நாட்டின் சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதோடு, கனடாவின் பிரதமராக தனது ஒன்பது ஆண்டு பதவிக் காலத்தினையும் நிறைவு செய்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டாட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற இவர் அந்த ஆண்டின் நவம்பர் 04 ஆம் தேதியன்று பதவி ஏற்றார்.
கனடாவின் வரலாற்றில் இரண்டாவது இளம் பிரதமர் ஆனார்.
இவர் கனடாவின் 23வது பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் பியர் எலியட் ட்ரூடோவின் மகன் ஆவார்.