ஜாக்கி இளைஞர் கோப்பை தொடக்கக் கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் ஹாங்காங்கை 4-2 என்ற விகிதத்தில் இந்தியாவின் U-16 அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
பெகே ஓரம், ரோகித் தணு மற்றும் லால் ரோகிமா ஆகியோர் கோல் அடித்தனர்.
இது இவ்வணியின் மூன்றாவது தொடர் வெற்றியாகும். இதற்கு முன்னர் இவ்வணி சீனாவின் டெய்பியை 4-0 என்ற வித்தியாசத்திலும், சிங்கப்பூரை 3-1 என்ற வித்தியாசத்திலும் வென்றுள்ளது.
பிபியனோ பெர்னான்டஸால் பயிற்சியளிக்கப்படும் இவ்வணி இதுவரை 22 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. இதில் தேசிய இளைஞர் அணி, சர்வதேச கிளப் மற்றும் அகடாமி அணி ஆகிய அணிகளுடன் விளையாடிய நட்பு ஆட்டங்களும் அடங்கும்.