உலகப் பொருளாதாரத்திற்கான முக்கிய நிகழ்வான ஜாக்சன் ஹோல் பொருளாதாரக் கொள்கை கருத்தரங்கமானது அமெரிக்காவின் வயோமிங்கில் உள்ள ஜாக்சன் ஹோல் எனுமிடத்தில் நடைபெற்றது.
இந்த வருடாந்திரக் கூட்டம் ஆனது, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இணைந்து உலகப் பொருளாதாரத்தில் உள்ள மிக நெருக்கடி மிக்கப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஒரு முக்கியத் தளமாக மாறியுள்ளது.
இந்த கருத்தரங்கமானது ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகள் உட்பட சுமார் 120 பேர் மட்டுமே பங்கேற்கும் அதன் பிரத்தியேக இயல்புக்காகப் பிரபலமாக அறியப்படுகிறது.