"இத்தகைய முதல் வகை" முன்னெடுப்பில், உத்தரகாண்ட் மாநில அரசாங்கம் ஆனது உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஜாதுங் கிராமத்தை மீண்டும் கட்டமைத்து அதை மறு சீரமைப்பு செய்வதற்கு முடிவு செய்துள்ளது.
இது 1962 ஆம் ஆண்டு இந்திய-சீனப் போருக்குப் பிறகு அங்கு தங்கியிருந்த மக்களால் கைவிடப்பட்டது.
அன்றிலிருந்து இந்தக் கிராமம் ஆனது, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ITBP) கட்டுப்பாட்டில் உள்ளது.
லடாக் போன்ற குளிர்ந்த பாலைவனப் பகுதியான இந்த இடமானது சரியான சாலை இணைப்பைக் கொண்டுள்ளதால், ஒரு சாத்தியமான சுற்றுலாத் தலமாக இது உள்ளது.
இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.