TNPSC Thervupettagam
August 10 , 2020 1448 days 617 0
  • அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், வடக்கு அயர்லாந்தின் முக்கிய அரசியல்வாதியுமான ஜான் ஹியூம் சமீபத்தில் காலமானார்.
  • 1998 ஆம் ஆண்டில் புனித வெள்ளி ஒப்பந்தத்தில் திரு.ஹியூம் அவர்களின் சமாதானப் பேச்சுவார்த்தையானது மிகவும் முக்கிய பங்கு வகித்தது.
  • புனித வெள்ளி ஒப்பந்தம் அல்லது பெல்ஃபாஸ்ட் ஒப்பந்தம் என்பது ஏப்ரல் 10, 1998 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட ஓர் இரட்டை ஒப்பந்தமாகும்.
  • இது வடக்கு அயர்லாந்தில் 1960 ஆம் ஆண்டுகளில் இருந்து அரசியல் மோதலாக வடிவம் கொண்டிருந்த பெரும்பாலான வன்முறைத் தொல்லைகளின் முடிவுக்கு வழி வகுத்தது.
  • வடக்கு அயர்லாந்தில் தற்போது உள்ள அரசாங்க முறையானது இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்