TNPSC Thervupettagam

ஜாமூனின் மரபணு வரிசைமுறை

December 8 , 2023 354 days 213 0
  • போபாலில் இயங்கிவரும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER)  ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் ஜாமூன் (நாவல்) மரத்தின் மரபணு வரிசை முறையை மேற்கொண்டுள்ளனர்.
  • S. குமினி என்ற மரபணுவை வரிசைப்படுத்த ஆராய்ச்சிக் குழுவானது ஆக்ஸ்போர்டு நானோபோர் மற்றும் 10x ஜெனோமிக்ஸ் வரிசைமுறை என்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியது.
  • இந்தப் பகுப்பாய்வானது, ஜாமூன் மரபணுவில் அதிக எண்ணிக்கையிலான குறியீட்டு மரபணுக்களை வெளிப்படுத்திய நிலையில் இது நியோபாலிப்ளோயிடி என்ற நிகழ்வைக் குறிக்கிறது.
  • நியோபாலிப்ளோயிடி நிகழ்வு என்பது பாலிப்ளோயிடியின் நிகழ்வை (இரண்டுக்கும் மேற்பட்ட முழுமையான குரோமோசோம்களைக் கொண்டிருக்கும் பரம்பரை நிலை) குறிக்கிறது.
  • நியோபாலிப்ளோயிடி நிகழ்வு என்பது பாலிப்ளோயிடியின் நிகழ்வைக் குறிக்கிறது.
  • ஒரு உயிரினத்தில் பல குரோமோசோம்களைக் கொண்டிருக்கும் இந்த நிலையானது அதன் உயிரணுக்களில் குரோமோசோம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழி வகுக்கிறது.
  • உயிரணுப் பிரிவின் போது ஏற்படும் பிழைகள் அல்லது வெவ்வேறு இனங்களுக்கு இடையில் ஏற்படும் கலப்பினப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் பாலிப்ளோயிடி என்ற நிகழ்வு ஏற்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்