பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டாவினுடைய பிறந்த நாள் நிகழ்வின் போது ஜார்கண்ட் மாநிலத்தின் 17-வது மாநிலதினம் கொண்டாடப்பட்டது.
தெற்கு பீகார் பகுதியில் வாழ்ந்துவந்த பழங்குடியின மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து தெற்கு பீகாரினைப் பிரித்து 2000-ஆம் ஆண்டு ஜார்கண்ட் தனிமாநிலமாக தோற்றுவிக்கப்பட்டது.
சோட்டா நாக்பூர் பகுதியில், பிரிட்டிஷாரின் நில கையகப்படுத்துதலுக்கு எதிராக போராடிய பழங்குடியினத் தலைவரே பிர்சா முண்டா ஆவார்.
கிறிஸ்துவ மிஷினரிகள் மூலம் அப்பகுதி மக்களை ஆங்கிலேயர் கிறிஸ்துவ மதத்திற்கு மத மாற்றம் செய்வதனை சவால்விடும் வகையில் “பிர்சைத்” (Birsait) எனும் நம்பிக்கையை (faith) இவர் ஏற்படுத்தினார்.
இவர் பிரபலமாக” தார்தி அப்பா” (Dharti Abba) அல்லது” புவியின் தந்தை” (Earth Father) என்றழைக்கப்படுவார். இதற்கு தங்களுடைய இழந்த வன உரிமைகளைப் பெறுவதற்காக போராடும் பிற பழங்குடியின ஆதிவாசி மக்களையும் ஊக்குவிக்கும் ஓர் நவீன கால நாட்டுப்புற நாயகன் என்பது இதன் பொருள்.
ஆங்கிலேயருடைய” நில குடியானவர்கள் முறை”க்கு (land settlement system) எதிராக பழங்குடியின மக்களை ஒன்று திரட்ட ”உல்குலான்“ (Ulgulan) அல்லது மாபெரும் கலகம் (The Great Tumult) எனும் இயக்கத்தை நடத்தினார்.