ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு சுமார் 75% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தனியார் துறை நிறுவனங்களில் 40,000 ரூபாய் வரை சம்பளத்துடன் கூடிய 75% பணியிடங்களில் உள்ளூர் ஆட்களை நியமிக்க வேண்டும் என்ற சட்டம் 2021 ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் அமலில் உள்ளது.
முன்னதாக ஹரியானா மாநில அரசும் இதே போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்தியது, ஆனால் இது பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தினால் ரத்து செய்யப்பட்டது.