- ஒடிசாவின் ஜார்சகுடாவில் புதிய விமான நிலையத்தை பிரதம அமைச்சர் (செப்டம்பர் 22) திறந்து வைத்தார். இவ்விமான நிலையம் “ஒடிசாவின் சக்திமையம்” என்றும் அழைக்கப்படுகிறது.
- பிராந்திய இணைப்புத் திட்டமான (Regional Connectivity Scheme - RCS) உடான் திட்டத்தின் கீழ் (UDAN) புவனேஷ்வர், ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களுக்குத் தேவையான இணைப்பை ஏற்படுத்தும் ஒடிசாவின் முதலாவது விமான நிலையம் இதுவாகும்.
- ஜார்சகுடா விமான நிலையத்தைத் தவிர, ஒடிசாவில் மேலும் 3 விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவையாவன
- ஜேப்பூர் (கோரபுட் மாவட்டம்)
- ரூர்கேலா (சுந்தர்கார்க் மாவட்டம்) மற்றும்
- உட்கேலா (கல்ஹாந்தி மாவட்டம்)
இவ்விமான நிலையங்கள் RCS திட்டத்தின் கீழ் கடலோர மாநிலமான ஒடிசாவின் தொலைதூரப் பகுதி மற்றும் கடைக்கோடி பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தும்.
- ஜார்சகுடா விமான நிலையமானது புவனேஸ்வருக்கு அடுத்து பயன்பாட்டுக்கு வரும் ஒடிசாவின் இரண்டாவது விமான நிலையமாகும்.