TNPSC Thervupettagam

ஜார்சகுடா விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்

September 23 , 2018 2260 days 650 0
  • ஒடிசாவின் ஜார்சகுடாவில் புதிய விமான நிலையத்தை பிரதம அமைச்சர் (செப்டம்பர் 22) திறந்து வைத்தார். இவ்விமான நிலையம் “ஒடிசாவின் சக்திமையம்” என்றும் அழைக்கப்படுகிறது.
  • பிராந்திய இணைப்புத் திட்டமான (Regional Connectivity Scheme - RCS) உடான் திட்டத்தின் கீழ் (UDAN) புவனேஷ்வர், ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களுக்குத் தேவையான இணைப்பை ஏற்படுத்தும் ஒடிசாவின் முதலாவது விமான நிலையம் இதுவாகும்.
  • ஜார்சகுடா விமான நிலையத்தைத் தவிர, ஒடிசாவில் மேலும்  3 விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவையாவன
    • ஜேப்பூர் (கோரபுட் மாவட்டம்)
    • ரூர்கேலா (சுந்தர்கார்க் மாவட்டம்) மற்றும்
    • உட்கேலா (கல்ஹாந்தி மாவட்டம்)

இவ்விமான நிலையங்கள் RCS திட்டத்தின் கீழ் கடலோர மாநிலமான ஒடிசாவின் தொலைதூரப் பகுதி மற்றும் கடைக்கோடி பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தும்.

  • ஜார்சகுடா விமான நிலையமானது புவனேஸ்வருக்கு அடுத்து பயன்பாட்டுக்கு வரும் ஒடிசாவின் இரண்டாவது விமான நிலையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்