முன்னாள் கால்பந்து நட்சத்திரமான ஜார்ஜ் வியா லைபீரியாவின் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அந்நாட்டு தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி, அவர் 61.5 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஜார்ஜ் வியா ஏற்கெனவே ஆப்பிரிக்காவின் முதல் பெண் அதிபரும் நோபல் அமைதிப் பரிசு பெற்றவரும் லைபீரியாவில் இருமுறை அதிபராயிருந்த விக்டர் எலான் ஜான்சன் சர்லீப் என்பவரிடம் அப்போதைய 2005 தேர்தலில் முதல் சுற்றில் வெற்றி பெற்று, பின் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார்.
ஜார்ஜ் வியா 1990-ல் லைபீரியாவின் குடிசைப் பகுதிகளில் இருந்து கால்பந்து நட்சத்திரமாக உருவெடுத்தார். அவர் குரு (kru) என்ற இனப் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.