இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியன ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் எறிகணைகளுக்கான புதிய கொள்முதல் மற்றும் இணைத் தயாரிப்பு ஏற்பாடுகளைத் தொடர்வதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன.
FGM-148 ஜாவெலின் என்பது அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட மிகவும் மேம்பட்ட பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் எறிகணை அமைப்பு ஆகும்.
இது மனிதனால் சுமந்து செல்லக்கூடிய வகையிலான, தோள்பட்டையில் வைத்து சுடக் கூடிய வகையிலான, ஒரு கவச எதிர்ப்பு அமைப்பு ஆகும், மேலும் இது ஏவப்பட்ட பிறகு இலக்கை நோக்கி தானாகவே முன்னேறிச் செல்கிறது.