TNPSC Thervupettagam

ஜி-20 அயலுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு

September 8 , 2020 1448 days 605 0
  • சமீபத்தில் சவுதி அரேபியாவானது நோய்த் தொற்றின் போது எல்லை தாண்டிய போக்குவரத்து இயக்கத்தின் மீது கவனம் செலுத்தும் ஜி-20 அயலுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டை நடத்தியது.
  • இந்தச் சந்திப்பின் போது இந்தியாவானது மக்களின் ஒருங்கிணைந்த எல்லை தாண்டிய போக்குவரத்து இயக்கம் மீதான ஜி-20 கொள்கைகளின் மேம்பாட்டைப் பரிந்துரைத்தது.
  • பரிந்துரைக்கப்பட்ட அந்த கொள்கைகள் பின்வரும் 3 கூறுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அவையாவன:
    • தனிமைப்படுத்துதல் நடைமுறைகளைத் தரப்படுத்துதல்.
    • பரிசோதனை நடைமுறைகளைத் தரப்படுத்துதல் மற்றும் உலக அளவில் பரிசோதனை முடிவுகளை ஏற்றுக் கொள்ளுதல்.
    • இயக்கம் மற்றும் போக்குவரத்து நடைமுறைகளைத் தரப்படுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்