TNPSC Thervupettagam

ஜிகா வைரஸ் - இந்திய வைராலஜி நிறுவனம்

April 24 , 2018 2278 days 885 0
  • அண்மையில் தேசிய வைராலஜி நிறுவனத்தின் (National Institute of Virology-NIV) ஓர் ஆய்வானது டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்களுக்கான வைரஸ்களை பரப்பும்   இந்தியன் ஏடிஸ்எஜிப்தி கொசுக்களானது (Indian Aedesaegypti mosquito)  ஜிகா வைரஸினால் (zika virus)  எளிதில்  பாதிக்கப்படவல்லன   என கண்டறிந்துள்ளது.
  • தேசிய வைராலஜி நிறுவனத்தின்    ஆய்வின் போது,   ஜிகா வைரஸின் MR-766 எனும் ஆப்பிரிக்கன் மரபுக் கூறினால் (African strain) பாதிக்கப்பட்ட  இந்தியன் ஏஜிஸ்எஜிப்டி கொசுவானது நோய்  தொற்றை எளிதாக  பரப்ப வல்லது என  கண்டறியப்பட்டுள்ளது.
  • ஜிகா வைரஸானது ஏந்திகள் வழியே பரவக்கூடிய  நோய்களில்  (vector borne disease) ஒன்றாகும். ஏஜிஸ் எஜிப்தி கொசுக்களால் ஜிகா வைரஸானது முதன்மையாக பரப்பப்படுகின்றது.
  • பாலுறவு தொடர்பு (sexual contact) மற்றும் இரத்தப் பரிமாற்றம் (blood transfusion)  மூலமும் ஜிகா வைரஸ் பரவக்கூடியது. மோசமான பிறப்பு குறைபாடுகளை (serious birth defects ) இந்த ஜிகா வைரஸ் ஏற்படுத்த வல்லது.
  • ஜிகா வைரஸின் முதல் வெளிப்பாடானது (Zika Virus outbreak)  முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு    தென் பசுபிக் பெருங்கடலில் உள்ள மார்குயிசஸ் தீவில் (Marquesas Islands)  கண்டறியப்பட்டது. பின்னர் அது 2015 ஆம் ஆண்டில் பிரேசிலுக்குப் பரவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்