அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் ஜின்ஜியாங் பகுதியில் சீனாவின் உய்குர் முஸ்லீம்கள் ஒடுக்கப் படுவதற்கான நடவடிக்கைகள் மீது தடைகள் விதிக்கும் ஒரு சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
உய்குர் முஸ்லீம் சீனாவின் வடமேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் ஒரு சிறுபான்மையின முஸ்லீம் சமூகமாகும்.
ஜின்ஜியாங் என்பது சீனாவிற்குள் இருக்கும் சீனாவின் மிகப்பெரிய ஒரு தனிச் சுதந்திரப் பகுதியாகும்.
இது கனிம வளம் நிறைந்து காணப்படுகின்றது. இது இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளுடன் அதன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.