TNPSC Thervupettagam

ஜிம்பாப்வேயின் தங்க நாணயம்

August 2 , 2022 721 days 440 0
  • ஜிம்பாப்வே நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த நாடு தங்க நாணயங்களை அறிமுகப் படுத்தியது.
  • ஜிம்பாப்வேயின் ரிசர்வ் வங்கி இந்த வெளியீடு குறித்த அறிவிப்பினை வெளியிட்டு, வணிக வங்கிகளுக்கு 2,000 நாணயங்களை விநியோகித்தது.
  • ஜூலை மாதத்தில், வருடாந்திரப் பணவீக்க விகிதம் 190% ஆக அதிகரித்தது.
  • இதனால் மத்திய வங்கியின் வட்டி விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்து 200% ஆக இருந்தது.
  • இந்த நாணயங்கள் எளிதில் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யக் கூடியவையாகும்.
  • இந்த தங்க நாணயம் "மொஷி-ஓவ்-துன்யா" என்று அழைக்கப்படுகிறது.
  • இதன் பொருள் "இடியை எழுப்பும் புகை" என்பதாகும்.
  • இது டோங்கா மொழியில் விக்டோரியா நீர்வீழ்ச்சியையும் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்