நாட்டில் நிலவும் பனிப்புகை (Smog) பிரச்சினையினை எதிர்கொள்ளும் விதத்தில் உலகின் மிகப்பெரிய காற்று சுத்திகரிப்பானை (world’s largest Air purifier) சீனா நிறுவியுள்ளது.
100 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கோபுரமானது, மத்திய சீனாவில் உள்ள ஷான்சி மாகாணத்தின் (Shaanxi) ஜியான் (Xian) நகரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு நாளைக்கு 10 மில்லியன் கியுபிக் மீட்டர் காற்றினை சுத்தம் செய்ய இயலும்.
இந்தக் கோபுரமானது பல்வேறு பசுமை இல்ல வாயுக்களை பயன்படுத்தி அதன் அடிப்பாகத்தின் அருகில் உள்ள அசுத்தமான காற்றினை உள்ளிழுத்து அதனை சூரிய ஒளியின் மூலமாக வெப்பப்படுத்துகிறது. பின்னர் கோபுரத்தின் கீழிருந்து மேலாக பல்வேறு காற்று தூய்மைப்படுத்தும் வடிப்பான்களின் வழியாகச் செலுத்தப்பட்டு தூய காற்றானது வெளியிடப்படுகிறது.