கூகுள் நிறுவனத்தின் டீப்மைன்ட் பிரிவானது, இரு பரிமாண இயங்குதளங்களில் விளையாட்டு சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படும் ஊடாடும் வகையிலான மெய்நிகர் உலகங்களை உருவாக்குகின்ற ஜீனி எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாதிரியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜீனி மாதிரியானது செயற்கைப் படங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் நிஜ உலகப் புகைப்படங்களிலிருந்தும் கூட விளையாட்டு சூழல்களை நன்கு உருவாக்கக் கூடியது.
விளையாட்டினுள் உள்ள பாத்திரங்களுக்கான, பிரத்தியேகமாக இணைய ஒளிப்படக் காட்சிகளில் உள்ள கட்டுப்பாடுகளை கற்று மறு அறிமுகம் செய்யும் திறனையும் ஜீனி கொண்டுள்ளது.