சமீபத்தில் ஜீனோம் இந்தியா திட்டம் (Genome India Project - GIP) என்ற ஒரு மரபணு குறியாக்கத் திட்டத்திற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது ஒப்புதல் அளித்துள்ளது.
ஜீனோம் இந்தியா திட்டம் என்பது மருத்துவம், விவசாயம் மற்றும் வாழ்க்கை அறிவியலில் புதிய செயல்திறனை செயல்படுத்த உதவும் 20 நிறுவனங்களின் ஒத்துழைப்பாகும்.
இது இந்திய மக்களைப் பாதிக்கும் நோய்கள் மற்றும் குணாதிசயங்களின் வகை மற்றும் தன்மையை முழுமையாக புரிந்து கொள்வதற்காக இந்திய “குறிப்பு மரபணுவின்” தொடரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜீனோம் (மரபணு)
ஒரு மரபணுத் தொகுதி என்பது ஒரு உயிரினத்தின் அனைத்து மரபணுக்களையும் கொண்ட ஒரு கூறாகும்.
இது ஒரு உயிரினத்தின் முழுமையான டி.என்.ஏ தொகுப்பாகும். இது அந்த உயிரினத்தின் அனைத்து மரபணுக்களையும் உள்ளடக்கியுள்ளது.
ஒவ்வொரு மரபணுவும் அந்த உயிரினத்தை உருவாக்குவதற்கு மற்றும் பராமரிப்பதற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது.