TNPSC Thervupettagam

ஜீபன் சம்பர்க் திட்டம்

January 31 , 2019 1998 days 589 0
  • ஒடிசாவின் முதல்வர் வருடந்தோறும் நடைபெறும் ஆதிவாசி மேளாவின் 2019 ஆம் ஆண்டு விழாவில் ஒடிசாவின் “குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின்” (Particularly Vulnerable Tribal Groups-PVTG) நலனுக்காக ஜீபன் சம்பர்க் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.
  • யுனிசெப்பின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்த திட்டமானது ஒடிசாவில் உள்ள “குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினரிடையே” விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • திறன் மேம்பாடு, சமூகத்தினருக்கு அதிகாரமளித்தல், குழுக்களுக்கிடையே புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பை அளித்தல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
  • ஒடிசா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான PVTG மக்கள் காணப்படுகின்றனர். 1975 ஆம் ஆண்டு தேபர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் PVTG எனும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்