ஜீபூ மரபணுத்தொகுதி மற்றும் இனப்பெருக்க உடன்படிக்கை
August 31 , 2017 2690 days 944 0
பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு , இந்தியா மற்றும் பிரேசில் இடையேயான ஜீபூ கால்நடை மரபணுத்தொகுதி (Zebu Cattle Genomics) மற்றும் இனப்பெருக்க ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையினை உறுதி செய்துள்ளது.
அக்டோபர் மாதம் 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜீபூமாடுகள்
ஜீபூ (Bos primigenius indicus or Bos indicus or Bos taurus indicus) என்பவை இந்தியத் துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட உள்நாட்டு மாடு இனங்கள் ஆகும்.
சிந்து சமவெளி நாகரிகத்தின் போது , சிந்து நதிப் படுகையில் இவ்வகை மாடுகள் உருவாகின என்று வரலாறு குறிக்கின்றது.
ஜீபூ மாடுகள் கொழுத்த திமில்களையும், பெரிய அசைத் தாடைகளையும் (dewlap) கொண்டிருக்கும். காதுகள் தொங்கிய நிலையில் தோற்றமளிக்கும் இந்த ஜீபூ மாடுகள் அதிக வெப்ப நிலைகளைத் தாங்ககூடியவை ஆகும். இவை பெருமளவில் வெப்பமண்டல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன.
ஜீபூ மாடுகள் உழவு மாடுகளாகவும், பால் மாடுகளாகவும், மாட்டு இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் , 1999 ஆம் ஆண்டு ஜீபூ மாடு ஒன்றினைக் குளோனிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.