நியூசிலாந்தில் உள்ள ஜிஎன்எஸ் அறிவியல் மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஜீலந்தியா கண்டத்தின் வடிவம் மற்றும் அளவைக் கண்டறிந்து உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியாளர்கள் 2017 ஆம் ஆண்டில் நியூசிலாந்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜீலந்தியா எனப்படும் 8வது கண்டம் இருப்பதை உறுதி செய்தனர்.
இந்த வரைபடமானது 2030 ஆம் ஆண்டில் பூமியின் முழுமையான கடற்பரப்பை ஆய்வு செய்யும் உலகளாவிய முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.