ஜி.எஸ்.டி (GST council) குழுவானது, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தயார்நிலையை பரிசீலித்த பின்னர், ஜூன் 1 முதல் நாடு முழுவதும் இணைவழி ரசீது முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்கிடையில் சரக்குகள் விரைவாக கொண்டு செல்வது சாத்தியமாகும்.
இது நாடு முழுவதும் சீரான நடைமுறையைக் கொண்டு வந்து மாநிலங்களுக்கிடையே சரக்குகள் தடையின்றி செல்ல வழி வகுக்கும்.
ஒரு இணையவழி ரசீதை தயாரிக்க, சரக்குகளை வழங்குபவரும் சரக்குகளை கொண்டு செல்பவரும் அவரவர்களது விவரங்களை ஜி.எஸ்.டி (GST) இணையவழித் தகவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு தனித்த இணையவழி ரசீது எண்ணானது (EBN) சரக்கு வழங்குபவருக்கும், பெறுபவருக்கும் மற்றும் அதைக் கொண்டு செல்பவருக்கும் பொதுவான தகவில் கிடைக்கப் பெறும்.
இந்த நடைமுறையானது, வரிவிதிப்பு அதிகாரிகள் உள்மாநில மற்றும் மாநிலங்களுக்கிடையேயான சரக்குகள் போக்குவரத்தை கண்காணிப்பதற்கு மட்டும் உதவுவதோடு சோதனைச் சாவடிகளில் நேரம் வீணாவதையும் குறைத்து போக்குவரத்திற்கான நேரத்தையும் மிச்சப்படுத்தும்.