TNPSC Thervupettagam
April 12 , 2024 227 days 196 0
  • சீனாவின் தனியார் விண்வெளி தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனமான லேண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி உருவாக்கிய ஜுக்-2 என்ற ஏவுகலமானது மூன்று செயற்கைக் கோள்களை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.
  • இந்த ஏவுகலம் ஆனது மீத்தேன் மற்றும் திரவ ஆக்ஸிஜன் கலவை எரிபொருளினால் இயக்கப்பட்டது.
  • வணிக ரீதியிலான செயற்கைக் கோள் ஏவுதல்களில் மீத்தேன்களைப் பயன்படுத்தச் செய்வது குறித்த பல்வேறு செலவுகளைக் குறைக்கவும், ஏவுகலங்களை மீண்டும் பயன்படுத்துவதை எளிதாக்கவும் உதவும்.
  • தற்போது, இந்த ஏவுகலம் ஆனது 1.5 மெட்ரிக் டன் எடையுள்ள விண்வெளிப் பொருட்களை 500 கிலோமீட்டர் சுற்றுப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.
  • எதிர்கால ஜுக்-3 ஏவுகலம் ஆனது, துருப்பிடிக்காத எஃகு உந்து கலன்கள் மற்றும் மீத்தேன்-திரவ ஆக்ஸிஜன் உந்து விசை இயந்திரங்களின் பல்வேறு தொகுப்புகளைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்