இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் இளவேனில் வளரிவான் சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் ISSF (International Shooting Sports Federation) உலகக் கோப்பைப் பெண்களுக்கான 10மீ துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டி 18 வயதாகும் இவரின் 2வது உலகக் கோப்பை மற்றும் முதல் இறுதிச் சுற்றுப் போட்டியாகும். பெண்களுக்கான இறுதிச் சுற்றில் முதல் தனிப் பெருமையைப் (Top Individual honor) பெறுவதற்கு8 புள்ளிகளைப் பெற வேண்டும். இந்த தகுதிச் சுற்றில் இவர் பெற்ற 631.4 புள்ளிகள் புதிய உலக சாதனையாகும்.
இது தவிர இளவேனில், ஸ்ரேயா அகர்வால் மற்றும் ஜீனா கிட்டா ஆகியோருடன் இணைந்து அணிகளுக்கான தங்கப் பதக்கத்தையும் (Team Gold Medal) வென்றுள்ளார்.
அர்ஜுன் பாபுதா, ஆண்களுக்கான 10மீ துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, தன்னுடைய இரண்டாவது ஜுனியர் உலகக் கோப்பைப் பதக்கத்தை வென்றுள்ளார்.