TNPSC Thervupettagam

ஜெனிவா டிஜிட்டல் ஒப்பந்தம்

April 30 , 2018 2401 days 769 0
  • மைக்ரோசாப்ட் மற்றும் இதர 33 நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை பாதுகாத்திடவும், அரசு ஆதரவுடன் பயனாளிகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்திடவும் உறுதியளிக்கும் நான்கு அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த இணைய பாதுகாப்பு ஒப்பந்தம் டிஜிட்டல் ஜெனீவா ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இணையத் தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிடும் நாடுகளான ரஷ்யா, வடகொரியா, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நிறுவனங்களாகும்.
  • இணைய பாதுகாப்பு தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் நான்கு விதிகளாவன.
    • பயனாளிகளையும், வாடிக்கையாளர்களையும் எங்கிருந்தாலும் பாதுகாப்பது.
    • அப்பாவிகளான வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான இணைய தாக்குதல்களை எதிர்ப்பது.
    • இணைய பாதுகாப்பை வலுப்படுத்திட பயனாளிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் மேம்பாட்டாளர்கள் ஆகியோருக்கு அதிகாரமளிப்பது.
    • இணைய பாதுகாப்பை உயர்த்திட ஒத்த எண்ணம் கொண்ட மற்ற பிரிவினர்களுடன் இணைந்து செயல்படுவது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்