2024 ஆம் ஆண்டானது, 1949 ஆம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கையின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
ஜெனீவா உடன்படிக்கைகள் என்பது போரின் போது மனிதாபிமானம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான சட்டத் தரநிலைகளை நிறுவும் சர்வதேச ஒப்பந்தங்களின் ஒரு தொகுப்பாகும்.
போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களைப் பாதுகாப்பதற்காக 1864 ஆம் ஆண்டில் முதல் ஜெனீவா ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் நான்கு உடன்படிக்கைகள்:
முதல் உடன்படிக்கை: போரின் போது போர்க் களத்தில் காயமடைந்த மற்றும் நோய் வாய்ப்பட்ட வீரர்களைப் பாதுகாக்கிறது.
இரண்டாவது உடன்படிக்கை: கடலில் காயமடைந்த, நோய் வாய்ப்பட்ட மற்றும் விபத்துக்குள்ளான கப்பல் படைகளின் இராணுவ வீரர்களுக்குப் பாதுகாப்பை விரிவுபடுத்துகிறது.
மூன்றாவது உடன்படிக்கை: போர்க் கைதிகளை முறையாக நடத்துவதில் கவனம் செலுத்துகிறது.
4வது உடன்படிக்கை: ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ளவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தச் செய்வதிலிருந்து நன்கு பாதுகாக்கிறது.
இந்த நான்கு உடன்படிக்கைகள் ஆனது, 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சர்வதேச மற்றும் சர்வதேசம் சாராத ஆயுத மோதல்களில் பாதுகாப்பை வலுப்படுத்த இரண்டு கூடுதல் நெறிமுறைகள் 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டன.
செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கத்துடன் சேர்த்து செம்படிகத்தினைக் கூடுதல் சின்னமாக அங்கீகரிப்பதற்கு 2005 ஆம் ஆண்டில் மூன்றாவது நெறிமுறை சேர்க்கப் பட்டது.