இதனுடைய தோற்றம் ஒரு வால் நட்சத்திரத்தில் இருந்து ஆரம்பிக்காத காரணத்தினால் இது தனித்துவம் மிக்கதாகக் காணப்படுகின்றது.
இதன் தோற்றம் குறுங்கோள் அல்லது அழிந்து போன வால் நட்சத்திரமான 3200 பேத்தோன் ஆக இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது.
ஜெமினிட்ஸ்க்குப் பிறகு, வடதுருவ அரைக் கோளத்தில் உள்ள பார்வையாளர்கள் அர்சிட்ஸ் (Ursids) என்ற விண்கற்கள் பொழிவைப் பார்க்க முடியும்.
எனினும், அர்சிட்ஸின் விகிதமானது ஜெமினிட்ஸின் விகிதத்தை விடக் குறைவானது ஆகும்.
விண் வீழ்கற்கள் என்பவை சூரியனைச் சுற்றி வரும் வகையில் தன்னுடைய சுற்று வட்டப் பாதையில் நிலையாகச் சுற்றி வரும் வால் நட்சத்திரத்திலிருந்துப் பிரிந்த ஒரு வகை பாறை மற்றும் பனித் துண்டுகளாகும்.
வீண் வீழ்கற்கள் பொழிவை ஒரு வால் நட்சத்திரம் அல்லது குறுங்கோள் தனக்குப் பின்னால் விட்டுச் சென்ற கழிவுப் பொருட்களை பூமி கடக்கும் போது காண முடியும்.