TNPSC Thervupettagam

ஜெய்ப்பூர் காலணி கொரியா

June 29 , 2019 1850 days 667 0
  • தென் கொரியத் தூதர் பாங் கில் ஷின் மற்றும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பகவான் மகாவீர் விக்லாங் சஹாயாதா சமிதி (BMVSS - Bhagwan Mahaveer Viklang Sahayata Samiti) ஆகியோர் இணைந்து “ஜெய்ப்பூர் காலணி கொரியா” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளனர்.
  • செயற்கை உறுப்புகள், செயற்கைக் கைகள், முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்டிருப்பதை மையமாகக் கொண்ட தட்டைப் பாதங்கள் ஆகியவற்றை அமைப்பதற்காக மருத்துவத் தொழில்நுட்ப வணிகத்துடன் கொரியா இணைந்துள்ளது.
  • 1975-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட BMVSS அமைப்பு 78 மில்லியன் மாற்றுத் திறனாளிகளுக்கும் மேல் மறுவாழ்வு அளிக்கும் உலகின் மிகப்பெரிய அமைப்பாகும்.
  • இது மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள், இடுக்கிகள் மற்றும் பிற உபகரணங்களை இலவசமாக வழங்குகின்றது.
  • ஜெய்ப்பூர் காலணி என்பது முழங்காலுக்குக் கீழே ஊனமுடன் இருப்பவர்களுக்கு இரப்பரை அடிப்படையாகக் கொண்ட நீடித்த மற்றும் எடை குறைவான செயற்கைக் காலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்