TNPSC Thervupettagam

ஜெய்ப்பூர் காலணி - மலாவி

November 5 , 2018 2085 days 630 0
  • ஆப்பிரிக்காவின் மலாவியில் “ஜெய்ப்பூர் காலணி” முகாமை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார். மேலும் அங்குள்ள பயனாளிகளுக்கு இந்தியத் தயாரிப்பான இலவச செயற்கை கால் உறுப்புகளை வழங்கினார்.
  • மகாத்மா காந்தியின் மனிதநேயப் பணியை கௌரவிக்கும் “மனித நேயத்திற்கான இந்தியா” என்ற திட்டத்தின்கீழ் இந்த முகாம் தொடங்கப்பட்டது.
  • ஒரு சிறந்த ஆன்மா மற்றும் பின்வரும் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் மகாத்மா ஆவதற்கான முதற்படியை காந்திஜி ஆப்பிரிக்காவின் மலாவியில் எடுத்ததால் முதலாவது ஜெய்ப்பூர் காலணி முகாம் மலாவியில் நடைபெற்றது.
  • “மனித நேயத்திற்கான இந்தியா” என்ற திட்டமானது அக்டோபர் 2 அன்று தொடங்கப்பட்டது. இது மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்துடன் ஒன்றிப் பொருந்துகிறது. அடுத்த ஓராண்டு காலத்தில் மகாத்மா காந்தியின் செய்திகளை இது உலகம் முழுவதும் எடுத்துச் செல்லவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்