TNPSC Thervupettagam

ஜெருசலேமிற்கு ஆஸ்திரேலியா அங்கீகாரம் மாற்றம்

October 29 , 2022 632 days 254 0
  • இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேம் என்ற நகரினை அங்கீகரித்த முந்தைய அரசாங்கத்தின் முடிவினை ஆஸ்திரேலியாவின் தற்போதைய அரசு மாற்றியுள்ளது.
  • மத்திய-இடதுசாரித் தொழிலாளர் கட்சி அரசின் அமைச்சரவையானது, மீண்டும் டெல் அவிவைத் தலைநகராக மாற்றுவதை அங்கீகரிப்பதற்கு ஒப்புக் கொண்டது.
  • இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஜெருசலேமின் அந்தஸ்து மீதான வழங்கீட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் அக்கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியது.
  • இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆறு நாள் போரைத் தொடர்ந்து கிழக்கு ஜெருசலேமை இணைத்து, முழு நகரத்தையும் அதன் "முழு அளவிலான மற்றும் பிரிக்க முடியாத தலைநகரமாக" அறிவித்தது.
  • பாலஸ்தீனியர்கள் கிழக்குப் பகுதியை தங்களது எதிர்கால அரசின் தலைநகராகக் கூறுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்