ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அங்கீகரித்ததனை பயனற்ற செல்லாத வெற்றாக (Null and void) அறிவிப்பதற்கான தீர்மானம் ஐ.நா.வின் பொது அவையில் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
172 நாடுகளில் மூன்றில் இரு பங்கு அதாவது இந்தியா உட்பட 128 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ஒன்பது நாடுகள் (வீட்டோ) மறுப்பை தெரிவித்தன. 35 நாடுகள் வாக்குச் செயல்முறையில் இருந்து விலகி நின்றன.
ஐ.நா பாதுகாப்பு அவையில் 4 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் 10 தற்காலிக உறுப்பினர்கள் என 14 உறுப்பு நாடுகளும் அமெரிக்காவின் இத்தகு அங்கீகாரத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகையில் இத்தீர்மானத்தினை அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுத்தியது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்து ஓர் வரைவுத் தீர்மானம் ஐ.நா.பொது அவையில் துருக்கி மற்றும் யேமனால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரச்சனைக்குரிய தொன்மை வாய்ந்த ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து டெல் அவிவில் உள்ள தற்போதைய அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றுவதற்கு உத்தரவிட்டதனை தொடர்ந்து ஐ.நா.பொது அவையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.