ஜெர்டன்ஸ் கூர்வாய்த் தவளை
March 8 , 2023
633 days
342
- மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான பகுதிகளில் மட்டுமே காணப்படும் உபெரோடான் மாண்டனஸ் என்ற தவளை 89 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- இது கடைசியாக 1934 ஆம் ஆண்டில் ஒரு பிரிட்டிஷ் அறிவியலாளரால் ஆய்வு செய்யப் பட்டது.
- இது ஜெர்டன்ஸ் கூர்வாய்த் தவளை, ஜெர்டன்ஸ் ராமனெல்லா, மலைப் புள்ளித் தவளை, மலை உருண்டைத் தவளை அல்லது மலபார் மலைத் தவளை என்றும் அழைக்கப் படுகிறது.
- இந்த தவளையானது ஒரு மலைப்பாங்கான இடங்களில் காணப்படும் இனமாக கருதப் படுவதோடு, இது 800-1,700 மீட்டர் உயரம் கொண்ட இடங்களில் மட்டுமே காணப் படுகிறது.
- அவை வயநாட்டின் தெற்குப் பகுதியில் இருந்து பால்காட் மற்றும் செங்கோட்டை கணவாய் வழியாக அகஸ்திய மலைப் பகுதி வரை பரவிக் காணப் படுகின்றன.
- இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் 'அச்சுறு நிலையில் உள்ள ஒரு இனமாக' வகைப்படுத்தப் பட்டுள்ளது.
Post Views:
342