TNPSC Thervupettagam

ஜெர்மனியின் சக்திவாய்ந்த X-கதிர்வீச்சு லேசர் கருவி

September 2 , 2017 2688 days 925 0
  • ஐரோப்பிய X-கதிர்வீச்சு ஃபிரீ எலக்ட்ரான் லேசர் (European x-ray Free Electron Laser - XFEL) கருவி ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இக்கருவியானது ஒரு நொடியில் 27,000 X-கதிர் கீற்றுகளை வெளிப்படுத்தும். இதன் மூலம், ஒரு அணுவில் உள்ள மிக நுண்ணிய பகுதியையும் ஒரு நொடியில் தெளிவாக படமெடுக்க முடியும்.
  • தாவர ஒளிச்சேர்க்கையின் போது சூரிய ஆற்றலை கிரகிக்கும் மூலக்கூறுகளை ஆராய்ச்சி செய்ய இக்கருவியை விஞ்ஞானிகள் பயன்படுத்த உள்ளனர்.
  • மேலும், சூரியனை ஆராய்ச்சி செய்யவும், வைரஸ்கள், செல்கள் போன்றவற்றினை ஆராயவும் இக்கருவியை விஞ்ஞானிகள் பயன்படுத்த உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்