TNPSC Thervupettagam

ஜெர்மனியில் Fridays for Future பிரச்சாரம்

September 28 , 2022 662 days 369 0
  • Fridays for Future ஆர்வலர்கள் ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில் பருவநிலை மாற்றம் தொடர்பான எதிர்ப்புப் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளனர்.
  • ஜெர்மனி முழுவதும் உள்ள 270க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் புறநகரங்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கின்றன.
  • 36,000க்கும் மேற்பட்ட மக்கள் பருவநிலை சார்ந்தப் போராட்டங்களை நடத்தச் செய்வதற்காக ஒன்று கூடிய நிலையில் பெர்லின் நகரில் மிகப்பெரிய பேரணி ஒன்று நடத்தப் பட்டது.
  • இந்த போராட்டக்காரர்கள் புவி வெப்பமடைதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை விரிவுபடுத்தச் செய்வதற்காக 100 பில்லியன் யூரோ நிதியை நிறுவுமாறும் ஜெர்மானிய அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்து உள்ளனர்.
  • வளர்ந்து வரும் நாடுகளுக்கான நிதி மற்றும் பருவநிலைக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் என்னுமிடத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை உச்சி மாநாடு (COP27) தொடங்குவதற்கு 6 வாரங்களுக்கு முன்னர் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
  • இத்தாலி, தென் கொரியா, அமெரிக்கா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற நாடுகளிலும் இதே போன்ற போராட்டங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்