TNPSC Thervupettagam

ஜெலியங்ரோங் பழங்குடியினர்

May 24 , 2019 1886 days 650 0
  • மணிப்பூரில் உள்ள ஜெலியங்ரோங் பழங்குடியினரால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தாவரங்களின் உள்ளூர் மருத்துவப் பயன்பாட்டை ஆவணப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
  • இந்தத் தாவரங்களின் மருத்துவப் பண்புகள் இதற்கு முன்பு அறியப்படவில்லை.
  • கினியூரா குசிம்பா, ஹிடியோடிஸ் ஸ்கேடென்ஸ், முசயென்டா களபரா மற்றும் சிமா வாலிச்சி ஆகியவை இவற்றுள் சிலவாகும்.
  • “பைபர் அருணாச்சல்லென்சிஸ்” போன்ற சில அரிதான மற்றும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய இனங்கள் பாரம்பரிய மருந்துகளை உருவாக்குவதற்காக அவர்களால் பயன்படுத்தப் படுகின்றன.
  • தமேங்லோங் மாவட்டத்தில் வாழும் ஜெலியங்ரோங் பழங்குடியினர் மணிப்பூரில் உள்ள 32 பழங்குடியினக் குழுக்களில் ஒன்றாவர்.
  • ஜெலியங்ரோங் என்று பொதுவாக அறியப்படும் மூன்று பிரிவுகள் பின்வருமாறு
    • ஜீமீ
    • லியாங்மாய்
    • ரோங்மேய்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்