TNPSC Thervupettagam

ஜெலியாங்ராங் ஐக்கிய முன்னணி அமைப்பின் அமைதி ஒப்பந்தம்

January 1 , 2023 567 days 334 0
  • வன்முறையைக் கைவிட்டு, அமைதியான ஜனநாயகச் செயல்பாட்டில் இணைவதற்கு ஒப்புக் கொண்ட மணிப்பூர் கிளர்ச்சிக் குழுவுடன் மத்திய அரசு ஒரு அமைதி ஒப்பந்தத்தினை மேற்கொண்டது.
  • இந்த முத்தரப்பு ஒப்பந்தமானது மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசாங்கங்கள் மற்றும் ஜெலியாங்ராங் ஐக்கிய முன்னணி அமைப்பின் (ZUF) கிளர்ச்சிக் குழு ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது.
  • ஆயுதமேந்தியப் போராளிகளின் மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்றத்திற்கு இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.
  • ஒன்றாக ஒப்புக் கொள்ளப்பட்ட அடிப்படை விதிகளை அமல்படுத்துவதை மேற் பார்வையிட ஒரு கூட்டுக் கண்காணிப்புக் குழுவானது அமைக்கப்படும்.
  • ஜெலியாங்ராங் ஐக்கிய முன்னணி அமைப்பு என்பது நாகா பழங்குடியினரின் ஜெலியாங்ராங் சமூக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
  • ஜெலியாங்ராங் ஐக்கிய முன்னணி அமைப்பு ஆனது மணிப்பூரில் செயல்படும் 13 கிளர்ச்சிக் குழுக்களில் ஒன்றாக தெற்காசியப் பயங்கரவாத இணையதளத்தினால் பட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்