அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ஜெல்போட்ஸ் என்ற மென்ரக ரோபோவினை (எந்திரத்தினை) உருவாக்கியுள்ளனர்.
ஜெலட்டின் கொண்டு முப்பரிமாண அச்சிடல் முறையின் மூலம் இந்த ஜெல்போட்கள் உருவாக்கப் படுகின்றன.
அவற்றின் வடிவம், அளவுருக்கள் மற்றும் ஜெல் வடிவமைப்பு ஆகியவை வடிவமைக்கப் பட்டுள்ள முறையின் காரணமாக எந்தவொரு கூடுதல் ஆற்றல் மூலங்களின் தேவை இல்லாமல் இவை இயங்கும் திறன் கொண்டவையாகும்.
வெப்பநிலைக்கு ஏற்ப இந்த ஜெல்கள் (கூழ்மம்) விரிவடைவது அல்லது சுருங்குவதே இதற்குக் காரணமாகும்.
திறன்மிகுக் கட்டமைப்புகளை உருவாக்க அவற்றைப் பயன்படுத்த இயலும்.
மனித உடலின் வழியாக உடல்பரப்புகளில் வழியே உட்சென்று, இலக்கு நிர்ணயிக்கப் பட்ட இடங்களுக்கு மருந்துகளைக் கொண்டு செல்வதற்கும் இவை பயன்படுத்தப் படலாம்.
அவை கடல் சார் எந்திரங்களாக, கடலின் மேற்பரப்பைக் கண்காணிக்கவும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படலாம்.
ஜெல்போட்கள் மனித உயிர் குறிப்பான்கள் மற்றும் உயிர்வேதியியல் ஆகியவற்றில் ஏற்படும் மாறுபாடுகளுக்கு ஏற்றவாறு ஊர்ந்து செல்லும் வகையில் பயிற்சிக்கப் படக் கூடியவையாகும்.