அசினெட்டோபாக்டர் பாமன்னி என்ற மருந்து-எதிர்ப்பு பாக்டீரியத்தை எதிர் கொள்ளும் திறன் கொண்ட ஒரு புதிய வகை நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
ஜோசுரபால்பின் CRABயால் (கார்பபெனெம்-எதிர்ப்பு அசினெட்டோபாக்டர் பாமன்னி) தூண்டப்பட்ட நிமோனியா மற்றும் செப்சிஸ் (எலி மாதிரிகள்) ஆகியவற்றிற்கு எதிராக பயனுள்ள விளைவுகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
2017 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் நுண்ணுயிர் எதிர்ப்பு "முன்னுரிமை நோய்க்கிருமிகளின்" பட்டியலில் CRAB முதலிடத்தில் இருந்தது.
இது ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பொதுவாகக் காணப் படுவதோடு, உலகெங்கிலும் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 20% வரை நோய்த் தொற்றுகளை ஏற்படுத்துகிறது.