ஸ்ரீநகர், கார்கில் மற்றும் லே ஆகிய பகுதிகளுக்கிடையே ஆண்டு முழுவதும் போக்குவரத்து இணைப்பை வழங்குவதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் ஜோஜிலா சுரங்கப்பாதை (Zojila Tunnel) திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய கேபினேட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
15 கி.மீ. நீளமுள்ள இருதிசை இரு வழித்தடமுடைய (Two lane-Bidirectional) ஒற்றை சுரங்கப் பாதையோடு, அதற்கு இணையாக 14.2 கி.மீ நீளமுடைய வெளியேறும் சாலையுடைய சுரங்கமும் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது.
ஜோஜிலா சுரங்கப் பாதை முடிவுற்றால் இதுதான் ஆசியாவின் நீளமான இருதிசைப் போக்குவரத்துச் சுரங்கப் பாதையாகும்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் (National Highway & Infrastructure Development Corporation limited) இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.