TNPSC Thervupettagam
June 3 , 2019 1883 days 606 0
  • இந்திய சமகாலக் கலைஞரான நளினி மலானி என்பவர் 2019 ஆம் ஆண்டிற்கான 7-வது ஜோன் மிரோ விருதை வென்றுள்ளார்.
  • உலகில் மிகவும் புகழ்பெற்ற இந்த சமகாலக் கலை விருதை வென்ற முதலாவது இந்தியக் கலைஞராக இவர் உருவெடுத்துள்ளார்.
  • இந்த விருதானது பார்சிலோனாவைச் சேர்ந்த பண்டாசியோ ஜோன் மிரோவால் வழங்கப்படுகின்றது.
  • “உலகம் முழுவதுமுள்ள அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட நபர்களுக்கு அதிலும் மிகவும் குறிப்பாகப் பெண்களுக்கு” குரல் கொடுப்பதற்கான ஒரு பணியில் இவரது வியக்கத்தகுப் பணி அமைப்புக்காக இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • இது ஸ்பெயினைச் சேர்ந்த ஓவியர் மற்றும் சிற்பியான ஜோன் மிரோவின் வாழ்க்கை மற்றும் பணி ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும் ஆய்வு, கண்டுபிடிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை எடுத்துக் காட்டும் கலைஞர்களின் தற்போதையப் பணியை அங்கீகரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்